இறால் முருங்கைக்காய் குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இறால் - கால் கிலோ

முருங்கைக்காய் - 2

புளி - பெரிய எலுமிச்சம்பழம் அளவு

மிளகாய்த்தூள் - ஒரு பெரிய மேசைக்கரண்டி

கொத்தமல்லித்தூள் - 1 1/2 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

வெந்தயப்பொடி - 1 தேக்கரண்டி

பொடியாக சின்ன வெங்காயம் - 1 கப்

பொடியாக அரிந்த தக்காளி - 1 கப்

கறிவேப்பிலைகள் - ஒரு கைப்பிடி

நல்லெண்ணெய் - 1/4 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புளியை நீரில் ஊறவைத்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி எண்ணெயை ஊற்றவும்.

சிறிய வெங்காயத்தைப் போட்டு பொன் வறுவலாக வதக்கவும்.

பிறகு தக்காளி, மஞ்சள் தூளைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும்.

வெந்தயப்பொடி, கறிவேப்பிலை சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்கவும்.

புளி நீர், தூள்கள், உப்பு, முருங்கைக்காய்த்துண்டுகள், சேர்த்து கொதிக்க விடவும்.

காய் வெந்ததும் ரால் சேர்த்து கொதிக்க விட்டு, ரால் வெந்ததும் மேலும் ஒரு தேக்கரண்டி எண்னெய் ஊற்றி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: