இறால் சொதி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நடுத்தரமான இறால் - 10

தேங்காய் - ஒரு மூடி

சோம்பு - 2 தேக்கரண்டி

மல்லித்தூள் - 1 தேக்கரண்டி

மிளகு - 5

சீரகம் - 1/4 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 8

பச்சை மிளகாய் - 2

புளி - ஒரு நெல்லிகாய் அளவு

கிராம்பு - 2

பட்டை - ஒரு துண்டு

எலுமிச்சம்பழம் - ஒரு மூடி

மாங்காய் - ஒரு சிறிய துண்டு (மாங்காய் கிடைக்காவிட்டால் பரவாயில்லை)

செய்முறை:

தேங்காயை துருவி அரைத்து பால் எடுக்கவும். முதல் பால் ஒரு டம்ளர் எடுக்கவும். இரண்டாவது பால் 3 டம்ளர் எடுக்கவும்.

மிளகு, சீரகம், சோம்பு, மல்லித்தூள் இவற்றை சேர்த்து அரைத்து எடுத்து வைத்திருக்கும் இரண்டாவது பாலில் இந்த மசாலாவை கரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பட்டை, கிராம்பு, அரை தேக்கரண்டி சோம்பு தாளிக்கவும்.

நீளமாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும். கரைத்து வைத்திருக்கும் சொதியை ஊற்றவும்.

சொதியில் மஞ்சள்தூள், உப்பு, சுத்தம் செய்த இறால், உருண்டையாக உருட்டிய புளி (புளியை கரைக்க கூடாது) நைசாக சீவிய மாங்காய், இவை எல்லாவற்றையும் போடவும். நன்றாக கொதிக்க விடவும்.

சுமார் 15 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி வைக்கவும். இப்போது முதல் பாலை சேர்க்கவும். சொதி ஆறியதும் எலுமிச்சம்பழம் பிழியவும்.

குறிப்புகள்: