இறால் குழம்பு
தேவையான பொருட்கள்:
இறால் - 20
பெரிய வெங்காயம் - 1
தக்காளி – பாதி
சுரைக்காய் - 15 துண்டுகள்
கேப்ஸிகம் (விரும்பினால்) - சிறிது
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி அல்லது காரத்திற்கு ஏற்ப
மசாலா தூள் - 1 தேக்கரண்டி
தேங்காய் பால் (விரும்பினால்) - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 8 பல்
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லி – சிறிது
தாளிக்க:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - சிறிது
உளுத்தம் பருப்பு – சிறிது
செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். தக்காளி மற்றும் கேப்ஸிகமை சிறியதாக நறுக்கவும். சுரைக்காயை சதுரமாக நறுக்கவும். புளியை சுடுதண்ணீரில் கரைத்து வைக்கவும். இறாலை சுத்தப்படுத்தி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுந்து போட்டு தாளித்து, அதில் இறாலை போட்டு வேகும் வரை விடவும். (இறால் நிறம் மாற வேண்டும்). வெந்த இறாலை தனியே எடுத்து வைக்கவும்.
அதே எண்ணெயில் வெங்காயம், கேப்ஸிகம் போட்டு வதக்கி, அதில் அரைத்த விழுதையும் போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
அவை வதங்கியதும், அதில் மிளகாய் தூள், மசாலா தூள், உப்பு போட்டு புளிக்கரைசலை சேர்க்கவும். அதில் சுரைக்காய் மற்றும் தக்காளியையும் போட்டு கொதிக்க விடவும்.
புளி வாசம் போனதும், இறாலை சேர்த்து மீண்டும் சிறிது நேரம் கொதிக்க விட்டு, அதோடு தேங்காய் பாலை சேர்த்து தீயை குறைத்து 2 நிமிடம் கொதித்தவுடன் இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
சாதம், சப்பாத்தி, தோசை என அனைத்திற்கும் நன்றாக இருக்கும்.
இதில் தேங்காய் பால் சேர்க்காமலும் செய்யலாம்.
கிரேவி அதிகம் விரும்புபவர்கள் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.