ஆட்டுக்குடல் கத்திரிக்காய் குழம்பு
தேவையான பொருட்கள்:
ஆட்டுக்குடல் – மீடியம் சைஸ் ஒன்று
கத்திரிக்காய் – 1/4 கிலோ
பருப்பு - 100 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - 2 - 3 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
மல்லி, கறிவேப்பிலை - சிறிது
சில்லி பவுடர் - 1 தேக்கரண்டி
கறிமசாலாத்தூள் - 1 - 2 மேசைக்கரண்டி
தேங்காய் (அரைக்க) - 5 மேசைக்கரண்டி
எண்ணெய் - 3 அல்லது 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
குடலை கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். சுத்தம் செய்த குடலுடன் சிறிது கறி மசாலா சேர்த்து பிரட்டி வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, மல்லி தழை, கத்திரிக்காயை நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காயை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, மிளகாய் மல்லி தழை, கறிவேப்பிலை சேர்க்கவும்.
வெங்காயம் தக்காளி வதக்கியவற்றுடன் சில்லி பவுடர் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி விட்டு சுத்தம் செய்த குடலை போட்டு கிளறி விடவும்.
அதன் பின்னர் பருப்பு மற்றும் கறி மசாலாவை சேர்த்து கிளறி விடவும்.
குடல் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விடவும்.
இரண்டு விசில் வந்ததும், தீயின் அளவை குறைத்து அரை மணி நேரம் வேக வைத்து இறக்கவும்.
குக்கரை திறந்து குடல் வெந்து விட்டதா என்று பார்க்கவும். குடலும் பருப்பும் சேர்ந்து வெந்து பார்க்க தளதளவென்று இருக்கும்.
இதில் நறுக்கின கத்திரிக்காய் மற்றும் அரைத்த தேங்காயை சேர்த்து கிளறி விட்டு உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.
மீண்டும் குக்கரை மூடி வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
இதனை ப்ளைன் சாதத்துடன் பரிமாறவும்.
இதனை சப்பாத்தி, ராகி தோசை, அரிசி மாவு ரொட்டியுடனும் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.