கருப்பட்டி இட்லி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இட்லி மாவு - 250 மில்லி (உப்பு போடாதது)

சோடா உப்பு - 1/4 தேக்கரண்டி

தேங்காய் துருவியது - தேவையான அளவு

கருப்பட்டி - 1/2 கிலோ

செய்முறை:

காலையில் இட்லி மாவில் சோடா உப்பு, விருப்பமான அளவு தேங்காய்ப் பூ, கருப்பட்டி பால் கெட்டியாக காய்ச்சி இலேசான சூடாகவோ அல்லது ஆறவிட்டோ வடிகட்டி மாவில் விட்டு கிளறவும்.

பிறகு மாவினை இட்லிகளாக ஊற்றி, இட்லித் தட்டில் வேக வைக்கவும்.

குறிப்புகள்:

விருப்பப்படி இனிப்பை குறைக்கவோ, கூட்டவோ செய்லாம். கருப்பட்டியைக் குறைத்து கொஞ்சம் சீனியும் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த மாவை இளஞ் சூட்டில் தோசையாக நெய் விட்டு சுடலாம்.