பச்சை சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பொட்டுக்கடலை - 1/2 கப்

பச்சை மிளகாய் - 4

கொத்தமல்லி - 1/2 கப்

புதினா - 1/4 கப்

தயிர் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

கடுகு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 1 தேக்கரண்டி

செய்முறை:

பொட்டுக்கடலை, கொத்தமல்லி, புதினா, பச்சைமிளகாய் உப்பு சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து சட்னியில் கொட்டி, தயிர் கலந்து பரிமாறவும்.

குறிப்புகள்: