கத்தரி சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - 100 கிராம்

பெரிய வெங்காயம் - 100 கிராம்

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 5

தேங்காய் - ஒரு சில்

பூண்டு - 4 பல்

புளி - கொட்டை பாக்களவு

உடைத்த கடலை - 2 தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு உப்பு தவிர எல்லாவற்றையும் வதக்க வேண்டும்.

வதக்கியவற்றை அரைத்து உப்பு சேர்த்து மறுபடியும் கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து கொட்ட வேண்டும்.

குறிப்புகள்: