புதினா கொத்தமல்லி புலாவ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புதினா - ஒரு கப்

கொத்தமல்லி - ஒரு கப்

அரிசி - ஒரு கப்

பச்சைமிளகாய் - 4

வெங்காயம் - ஒன்று

உப்பு - தேவையான அளவு

பட்டை - சிறிய துண்டு

செய்முறை:

வெங்காயம், பச்சைமிளகாய், புதினா, கொத்தமல்லி இவற்றை மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.

ஒரு குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை தாளித்து பின்னர் அதில் அரைத்ததை போட்டு வதக்கவும்.

அதன் பிறகு அரிசி, உப்பு போட்டு, 1 க்கு 2 கப் நீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

குக்கரில் ஒரு விசில் வந்ததும் சிம்ல் வைத்து 5 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

இதனை 10 நிமிடத்தில் செய்து விடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்புகள்: