காஷ்மீரி பொட்டேட்டோ புலாவ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 1 பெரியது

பாஸ்மதி அரிசி - 300 கிராம்

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

பட்டை - 1 துண்டு

பிரியாணி இலை - 1

ஏலம் - 2

கிராம்பு - 2 (விருப்பப்பட்டால்)

சோம்பு - கால் ஸ்பூன்(விருப்பப்பட்டால்)

வெங்காயம் - 1

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

தண்ணீர் - அரை லிட்டர்

மல்லி இலை - கொஞ்சம் அலங்கரிக்க.

செய்முறை:

அரிசி களைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். வெங்காயம், உருளைக்கிழங்கு தோல் நீக்கி மெல்லிய துண்டுகளாய் கட் செய்யவும். மல்லி இலை பொடியாக கட் செய்யவும்.

அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பட்டை, பிரியாணி இலை, சோம்பு, ஏலம், கிராம்பு, வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

பின்பு இஞ்சி பூண்டு, மஞ்சள், உப்பு, உருளை சேர்த்து வதக்கி அளவுத்தண்ணீர் சேர்த்து அரிசி போட்டு மூடி விடவும்.

நன்றாக கொதிவந்ததும் சிம்மில் வைத்து 15- 20 நிமிடம் வைக்கவும்.

வெந்த பின்பு 5-10 நிமிடம் கழித்து திறந்து மல்லி இலை தூவி பரிமாறவும்.

சுவையான காஷ்மீரி பொடேட்டோ புலாவ் ரெடி.

குறிப்புகள்:

இது காஷ்மீர், பாகிஸ்தான் ரெஸ்டாரண்டில் கிடைக்கும். ருசி நன்றாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனியன் ரைத்தாவுடன் பரிமாறவும்.