ஆனியன் ரைஸ் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி ரைஸ் - 2 கப்

சின்ன வெங்காயம் - ஒரு கப்

தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்

இஞ்சி - ஒரு துண்டு

காய்ந்த மிளகாய் - 2

பட்டை, லவங்கம் - சுவைக்கேற்ப

பூண்டு - 5 பல்

நெய் - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேங்காய் துருவல், இஞ்சி, பூண்டு, வரமிளகாய், பட்டை, லவங்கம் எல்லாவற்றையும் அரைத்து வைக்கவும்.

குக்கரை அடுப்பில் வைத்து நெய் விட்டு வெங்காயத்தைப்போட்டு வதக்கவும்.

சிறிது வதங்கியதும் அரைத்து வைத்தவற்றைப் போட்டு வதக்கவும்.

அரிசியைப்போட்டு லேசாக வதக்கி 4 கப் நீர் விட்டு கலந்து ஒரு விசில் விட்டு இறக்க சுவையான ஆனியன் ரைஸ் தயார்.

குறிப்புகள்: