வேப்பம்பூ ரசம் (1)
0
தேவையான பொருட்கள்:
புளி விழுது - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு:
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
உலர்ந்த மிளகாய் - 5 அல்லது 6
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
தாளிக்க:
நெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உலர்ந்த வேப்பம்பூ - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ளவற்றை வறுத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
இரண்டு கப் தண்ணீரில் புளி விழுது, உப்பு, மஞ்சள் தூள், அரைத்த பொடி அனைத்தையும் கலந்து கொள்ளவும்.
இதனை ஒரு குக்கரில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்.
பிறகு திறந்து, நெய்யில் கடுகு, வேப்பம்பூ தாளித்துக் கொட்டி பரிமாறவும்.