வெந்தய ரசம்

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

புளி - ஒரு எழுமிச்சம் பழ அளவு

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

சிறிய வெங்காயம் - 10

காய்ந்த மிளகாய் - 5

சீரகம் - 1/2 தேக்கரண்டி

பூண்டு - 10 பல்

கறிவேப்பிலை - சிறிது

கடுகு - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புளியை அரிசி கழுவிய நீரில் ஊற வைத்து, கரைத்து, வடிகட்டி வைக்கவும்.

வெங்காயம், பூண்டு தோல் நீக்கி, இரண்டாக நறுக்கவும்.

மிளகாயை கிள்ளி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பூண்டு, மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் வதங்கிய பின், கறிவேப்பிலை, கரைத்த புளி கரைசல், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: