மோர் ரசம்
0
தேவையான பொருட்கள்:
சிறிது புளித்த மோர் - 1 கப்
வற்றல் மிளகாய் - 2
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெறும் வாணலியில் வெந்தயம், மிளகாயை தனித்தனியாக வறுத்து அரைக்கவும்.
மோரில் மஞ்சள், உப்பு சேர்த்து வைக்கவும்.
அரைத்த பொடிகளை மோரில் சேர்த்து 2 நிமிடங்கள் அடுப்பில் வைக்கவும்.
கடுகு, கறிவேப்பிலை தாளித்து பரிமாறவும்.