பூண்டு ரசம் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பூண்டு - 10 பல்

புளி - ஒரு எலுமிச்சம்பழ்ம் அளவு

மஞ்சபொடி - 1/2 தேக்கரண்டி

ரசப்பொடி - 1 தேக்கரண்டி

மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

ஜீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

ஜீரகம் - 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் - சிறிதளவு

கறிவேப்பிலை - ஒரு ஆர்க்

நெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புளியைக்கரைத்து வடிகட்டவும்.

புளிக்கரைசலில் மஞ்சதூள், மிளகு தூள், ஜீரக தூள், ரசம் பொடி,பெருங்காயம் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

பூண்டை நசுக்கி கொள்ளவும்,கடாயில் நெய் ஊற்றி கடுகு, ஜீரகம், பூண்டு தாளித்து கொதிக்கும் ரசத்தில் சேர்க்கவும். கருவேப்பிலை சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்: