புளி ரசம்
0
தேவையான பொருட்கள்:
புளி - 1 நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் - 4
ரசப்பொடி - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
வெல்லம் - சிறிது
உப்பு - தேவையான அளவு
ரசப் பொடிக்கு பொடிக்க:
சீரகம் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
மிளகு - 1 1/2 தேக்கரண்டி
தனியா - 4 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
புளியை கரைத்து, உப்பு, ரசப்பொடி, வெல்லம், பெருங்காயம், 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நுரைத்து வரும் போது, எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து கொட்டி இறக்கி பரிமாறவும்.