பருப்பு ரசம் (8)
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1/4 ஆழாக்கு
ரசப்பொடி - 1 தேக்கரண்டி
புளி - 2 கொட்டைப்பாக்கு அளவு
சிறிய தக்காளி - 1
கடுகு - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு துண்டு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பருப்பை அரை ஆழாக்கு தண்ணீரில் நன்றாகக் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
தக்காளியை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
புளியை ஊறவைத்து கரைத்து சக்கைகளை நீக்கி விட்டு ஓர் ஆழாக்குப் புளி தண்ணீராக எடுத்துக் கொள்ளவும்.
அதில் உப்பு, பெருங்காயம், நறுக்கிய தக்காளி, ரசப்பொடி இவற்றைப் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.
ரசம் சுமார் 8 நிமிடங்கள் நன்கு கொதித்த பிறகு வேகவைத்த பருப்பை போட்டு நுரைத்து வந்தபின் கறிவேப்பிலை, கொத்தமல்லி போடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகை தாளித்துக் கொட்டி இறக்கி பரிமாறவும்.