பருப்பு ரசம் (7)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பருப்பு - 100 கிராம்

வெங்காயம் - 100கிராம்

பூண்டு - 6 பல்

மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 10

தேங்காய் - அரை மூடி

சீரகம் - 1 தேக்கரண்டி

மல்லித்தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - சிறிதளவு

புளி - ஒரு உருண்டை

தக்காளி - 2

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - சிறிதளவு

கடுகு - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

பெருஞ்சீரகம் - சிறிதளவு

வெங்காயம் - சிறிதளவு

செய்முறை:

குக்கரில் பருப்பு, பூண்டுபல், வெங்காயம் போட்டு வேக வைத்து எடுக்கவும்.

தேங்காயை துருவி அதனுடன் சீரகத்தை போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு பருப்பை தனியாக எடுத்து, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வடிக்கட்டி தேங்காய், சீரக விழுதை சேர்த்து அதனுடன் மல்லிதூள், மிளகாய்தூள், மஞ்சள் பொடி போட்டு கலக்கவும்.

வெங்காயம், பச்சைமிளகாய் இரண்டையும் போட்டு புளிகரைசலை ஊற்றி தக்காளி, உப்பு போட்டு எல்லாவற்றையும் கலந்து அரை மணி நேரம் கொதிக்க வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருஞ்சீரகம், சிறிதளவு வெங்காயம் போட்டு தாளித்து ரசத்தில் போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: