தேங்காய்பால் ரசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய்ப்பால் - 2 கப்

தக்காளி - 3

புளி - எலுமிச்சம்பழம் அளவு

ரசப்பொடி - 1 தேக்கரண்டி

மஞ்சள் பொடி 1/2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 3

மல்லித்தழை - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

நீளமாக நறுக்கிய வெங்காயம் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1/4 தேக்கரண்டி

பூண்டு - 4 பல்

கறிவேப்பிலை - சிறிது

மிளகாய் வற்றல் - 2

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

செய்முறை:

தக்காளியை நீரில் போட்டு கொதிக்கவைத்து தோலுரித்துக் கொள்ளவும்.

பச்சைமிளகாயை நீளமாகவும், மல்லி, கறிவேப்பிலையை பொடியாகவும் நறுக்கவும்.

இத்துடன் நறுக்கிய வெங்காயத்தில் பாதி அளவு மஞ்சள்பொடி, ரசப்பொடி, உப்பு சேர்த்து நன்கு பிசையவும். அத்துடன் புளிக்கரைச்சலை சேர்க்கவும்.

கடைசியாக தேங்காய்ப்பால் சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிது நீரும் சேர்க்கலாம்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடேறியதும் கடுகு சேர்த்து வெடித்ததும், நீளமாக நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, மிளகாய்வற்றல் போட்டு தாளித்து, ரசத்தில் கொட்டவும்.

ரசம் பொங்கி வருகையில் அடுப்பை அணைத்து விடவும். தேங்காய்ப்பால் சேர்த்து இருப்பதால் அதிகம் கொதிக்கவிடக்கூடாது.

குறிப்புகள்: