தயிர் ரசம்
தேவையான பொருட்கள்:
தயிர் - 1/2 கப்
தேங்காய் துருவல் - 1/4 கப்
மிளகாய் வற்றல் - 4
சின்ன வெங்காயம் - 7
பொட்டுக்கடலை - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகு - 15
பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி
பூண்டு - 3 பல்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சின்ன வெங்காயத்தை தோலுரித்து எடுத்துக் கொள்ளவும்.
மிளகாய் வற்றல் இரண்டாக கிள்ளி வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் மிளகாய் வற்றல், மஞ்சள் தூள், மிளகு, பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு பொடிச் செய்துக் கொள்ளவும்.
பொடித்தவற்றுடன் பொட்டுக்கடலையை போட்டு அரைக்கவும். பிறகு அதில் வெங்காயம், பூண்டு, தேங்காய் துருவல் சேர்த்து ஒரு மேசைக்கரண்டி அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி அதில் மிக்ஸியில் அரைத்த தேங்காய், பொட்டுக்கடலை கலவையை ஊற்றி கலக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
அடுப்பில் வைத்து கொதிக்கவிடாமல் மிகவும் எளிமையாகவும், உடனடியாகவும் தயாரிக்ககூடியது