தக்காளி ரசம் (5)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தக்காளி பெரியது - 3

துவரம் பருப்பு - 1 கை பிடி

புளி - பெரிய நெல்லி அளவு

பூண்டு - 4 பல்

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

ரசபொடி - 1 மேசைக்கரண்டி

கரிவேர்பில்லை - சிறிது

கொத்தமல்லி கொத்து- சிறிது

கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க

காய்ந்த மிளகாய் - 3

நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

துவரம் பருப்பு, தக்காளி இரண்டையும் நன்றாக கழுவி குக்கரில் மஞ்சள் தூள்,1 தேக்கரண்டி நல்லெண்ணெய், சிறுது தண்ணீர் விட்டு 4 விசில் வரை வேக விடவும்.

ஆவி அடங்கியதும் அதை ஆற விட்டு - கைகளாலோ அல்லது மிக்சியிலோ அரைத்து வைக்கவும்.

இதில் கரிவேர்பிலை, கொத்தமல்லி நசுக்கி இரண்டையும் போட்டு - கைகளால் நன்றாக கலக்கவும்.

பூண்டை நன்றாக தட்டி போடவும்.

இதில் புளி தண்ணீர் விடவும்.

பிறகு இதில் உப்பு போட்டு தண்ணீர் விட்டு - மிகவும் புளிப்பாக இல்லாதவாறு தண்ணீர் விட்டு கலக்கவும்.

அடுப்பில் கடாய் வைத்து மீதி எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு போடவும்.

கடுகு, உளுத்தம் பருப்பு வெடித்தவுடன், காய்ந்த மிளகாய் போட்டு கலக்கி வைத்த கலவையை ஊற்றி நுரையாக பொங்கியவுடன் அடுப்பை நிறுத்தவும்.

ஒரு பாத்திரத்தில் ரசபொடி போட்டு அதில் கொதித்த கலவையை ஊற்றி பரிமாறவும்.

குறிப்புகள்: