தக்காளி புளி ரசம்
தேவையான பொருட்கள்:
தக்காளி – 1 பெரியது
புளி – நெல்லியளவு
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
பெருங்காயதூள் – கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
மல்லி இலை – சிறிது
உப்பு – தேவைக்கு.
வறுத்து பொடிக்க :
மிளகு – அரைடீஸ்பூன்
சீரகம் – அரைடீஸ்பூன்
பூண்டு – நான்கு பல்
தாளிக்க :
எண்ணெய் – 1டேபிள்ஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 1
கருவேப்பிலை – இரண்டு இணுக்கு
செய்முறை:
தக்காளியை நறுக்கி ஒரு கப் தண்ணீரில் நன்கு பிசைந்து வைக்கவும், புளியும் சிறிது தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
மிளகு,சீரகம்,பூண்டை தட்டி வைக்கவும்.
தக்காளி கரைசலோடு மஞ்சள் தூள்,பெருங்காயம் சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்கு கொதி வரவும் புளிக்கரைசல் சேர்க்கவும்.வறுத்து பொடித்ததை சேர்க்கவும். கீரிய பச்சை மிளகாய் நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைக்கவும்.புளிப்பு பார்த்து தண்ணீர் தேவைக்கு சேர்க்கலாம்.நுரை கூடி வரும்.
தாளிப்பு கரண்டியில் எண்ணெய் விட்டு கடுகு,வெந்தயம்,மிளகாய் வற்றல், கருவேப்பிலை தாளித்து நுரை கூடி வரும் ரசத்தில் விடவும்.உப்பு சரி பார்க்கவும்.அடுப்பை அணைத்து பாத்திரத்தை மூடி வைக்கவும்.
சுவையான தக்காளி புளி ரசம் ரெடி.