கொடுவா கருவாடு ரசம்
தேவையான பொருட்கள்:
கொடுவா கருவாடு (கழுவிக்கொள்ளவும்) - 4 சிறு துண்டுகள்
முழு மல்லி - 1 தேக்கரண்டி
சீரகம் -1 மேசைக்கரண்டி
சோம்பு - 1 மேசைக்கரண்டி
மிளகு - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி
இஞ்சி - 3 அங்குலம்
பச்சை மிளகாய் 3
காய்ந்த மிளகாய் - 3
தக்காளி - 2 பெரியது
பூண்டு - 10 பல் (தோல் உரிக்காமல்)
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் 1/2 தேக்கரண்டி
மல்லி இலை - 1 கோப்பை
கறிவேப்பிலை 2 கொத்து
எண்ணை - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இஞ்சி, பச்சை மிளகாய், முழு மல்லி, சீரகம், மிளகு, சோம்பு ஆகியவற்றை நன்றாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் தக்காளி, மல்லி இலை 1/2 கப், பூண்டு சேர்த்து லேசாக அரைத்துக்கொள்ளவும்.
தண்ணீரில் அரைத்த மசாலா, மஞ்சள் தூள், உப்பு போட்டு கலக்கி வைக்கவும்.
சட்டியில் எண்ணை ஊற்றி கருவாடை சற்று வறுத்து அந்த சட்டியிலேயே ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு மீதமுள்ள எண்ணையில் காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயம் கறிவேப்பிலை போட்டு வதக்கி, கரைத்து வைத்த ரசத்தை ஊற்றவும்.
ஒரு கொதி வந்ததும் மல்லி இலையை தூவி இறக்கி பரிமாறவும்.