குழந்தைகள் கேரட் ரசம்
தேவையான பொருட்கள்:
கேரட் சுமாரான அளவு - 1
புளி - சிறிய எலுமிச்சை அளவு
மிளகு சீரகம் - தலா அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு பிடி
நெய் அல்லது எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு தூள் - தேவையான அளவு
செய்முறை:
கேரட்டை வேகவைத்து நன்கு மசித்து வைக்கவும்.
மிளகு சீரகம் மற்றும் பருப்புகளை ஒரு தேக்கரண்டி எண்ணெயில் சிவக்க வறுத்து பொடித்து வைக்கவும்.
புளியை ஊறவைத்து இரண்டு கோப்பை நீரில் அதை கரைத்து வடிகட்டவும்.
பின்பு அதில் மசித்த கேரட், தயாரித்து வைத்துள்ள பொடி, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, மற்றும் மஞ்சள்தூள், உப்புத்தூளைச் சேர்த்து கொதிக்கவிட்டு ஐந்து நிமிடம் கழித்து இறக்கி விடவும்.
பின்பு ஒரு சிறிய சட்டியில் நெய்யை ஊற்றி கடுகை பொரியவிட்டு பெருங்காயம் மற்றும் காய்ந்த மிளகாயை உடைக்காமல் முழுதாகவே போட்டு வறுத்து ரசத்தின் மீது கொட்டி பரிமாறவும்.