கம கம ரசம்
தேவையான பொருட்கள்:
புளி - 1 எழுமிச்சை அளவு
மசாலா தூள் - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
உரலில் இடிக்க தேவையானவை: (இவை அனைத்தையும் உரலில் போட்டு நன்கு தட்டி வைக்கவும்.)
சோம்பு - 2 தேக்கரண்டி
நச்சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி இலை - சிறிது
பச்சை மிளகாய் - 1
பூண்டு தோலுடன் - 4 பல்
வெங்காயம் தோலுடன் - 2 சிறியது
தேங்காய் - 2 கீற்று
தாளிக்க:
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - சிறிது
செய்முறை:
புளியை நன்கு சாறு எடுத்து அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் மசாலா தூள் கலந்து வைக்கவும்
அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் இடித்தவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
நல்ல ப்ரவுன் கலருக்கு வந்ததும் புளி கரைசலை ஊற்றி லேசாக கொதி வர ஆரம்பித்ததும் அடுப்பை அனைத்து விட்டு பரிமாறவும்.