எலுமிச்சம் பழ ரசம் (4)
0
தேவையான பொருட்கள்:
தனியா - 1/4 தேக்கரண்டி
மிளகு - 1/4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
துவரம் பருப்பு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
எலுமிச்சம் சாறு - 1 தேக்கரண்டி
தக்காளி பழம் - 1
கடுகு - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தனியா, மிளகாய், மிளகாய்வற்றல், துவரம் பருப்பு, ஆகியவற்றை வறுத்து சீரகத்துடன் வைத்து அரைத்துக் கொள்ளவும்.
சீரகத்தை வறுக்க வேண்டாம்.
துவரம் பருப்பை தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.
தண்ணீரில் தக்காளியை பிசைந்து விட்டு, அரைத்து வைத்த பொடியை போட்டு வேக வைத்த பருப்பையும் சேர்த்து, அதனுடன் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்து எலுமிச்சை சாறு பிழிந்து பரிமாறவும்.