ஈஸி ரசம் (1)
0
தேவையான பொருட்கள்:
புளி - எலுமிச்சை அளவு
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பூண்டு - 5 பல் (உரிக்காமல்)
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 2
மல்லித்தழை - சிறிது
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
வரமிளகாய் - 1
செய்முறை:
மிக்ஸியில் மிளகு, சீரகம், பச்சைமிளகாய், தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை, மல்லித்தழை எல்லாவற்றையும் போட்டு அரைக்கவும்.
நன்கு மசிந்தவுடன் புளியை 2 கிளாஸ் தண்ணீரில் கரைத்து ஊற்றி அரைத்தவற்றுடன் சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், வரமிளகாய் தாளித்து அரைத்து கரைத்தவற்றை ஊற்றி நுரை வரும்போது இறக்கி பரிமாறவும்.