இடித்த ரசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புளி - நெல்லிக்காய் அளவு

தக்காளி - 2

பச்சைமிளகாய் - 2

கொத்தமல்லி - 2 கொத்து

பூண்டு - 1

கறிவேப்பிலை - ஒரு கொத்து

வெங்காயம் - 1

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

சீரக தூள் - 1/2 தேக்கரண்டி

பெருங்காயத்தூள் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புளியை சுடுநீரில் ஊற வைக்கவும்.

தக்காளி, பூண்டு, பச்சைமிளகாய், கொத்தமல்லி ஆகிவற்றை அம்மியில் இடித்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, வெங்காயம் தாளிக்கவும்.

பின் இடித்த விழுதை சேர்க்கவும்.

வதங்கியதும் தூள் வகைகளை சேர்த்து நன்கு கிளறவும்.

பின் கரைத்த புளிக்கரைசலை சேர்த்து நுரை பொங்கும் போது அணைத்து விடவும். பின்பு மேலே கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: