வடைக் குழம்பு





தேவையான பொருட்கள்:
மசால் வடை (பருப்பு வடை) - 4
தக்காளி - 2
வெங்காயம் - 3
தேங்காய் - ஒரு சில்லு
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
தனியாத் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 50 மி.லி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளியை சிறுத் துண்டுகளாக நறுக்கவும். வடைகளை தயாராக பொரித்து எடுத்துக் கொள்ளவும்
மிக்ஸியில் வெங்காயம், தக்காளி, தேங்காய், சீரகம் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
அரைத்த விழுதுடன் உப்பு, மஞ்சள் தூள், தனியாத் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் கலந்து கரைத்துக் கொள்ளவும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் கரைத்து வைத்திருக்கும் குழம்பு கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.
குழம்பு கொதி வந்ததும் வடைகளை போட்டு மேலும் 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்கவிட்டு இறக்கி கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.