சுண்டைக்காய் குழம்பு (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சுண்டைக்காய் - 1 கப்

புளி - நெல்லிக்காய் அளவு

அரைப்பதற்கு:

தேங்காய்த்துருவல் - 3/4 கப்

சின்ன வெங்காயம் - 3

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி (காரத்திற்கு ஏற்ப கூட்ட அல்லது குறைக்கவும்)

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

தாளிக்க தேவையானவை:

எண்ணெய் - 1 தேக்கரண்டி

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 2

கடுகு - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

சுண்டைக்காயை ஒன்றிரண்டாக நசுக்கி நீரில் அலம்பவும்.

வாணலியில் தண்ணீர், புளிக்கரைசல், உப்பு, சிறிது கறிவேப்பிலை சேர்த்து, சுண்டைக்காயை போட்டு வேக விடவும்.

அரைக்க வேண்டிய பொருட்களை மையாக அரைக்கவும். சுண்டைக்காய் வெந்தவுடன் அரைத்த கலவை சேர்த்து கொதிக்க விடவும்.

உப்பு, புளி, காரம் சரி பார்க்கவும். நன்கு கொதித்ததும் தாளிக்க வேண்டியவற்றை தாளித்து சேர்க்கவும்..

குறிப்புகள்: