ஓங்காய் பப்பு குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு - 100 கிராம்

கத்திரிக்காய் - 10

தக்காளி - 3

வெங்காயம் - 2

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

வரமிளகாய் - 4

பூண்டு - முழுதாக ஒன்று

பச்சை மிளகாய் - 10

புளி - சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

கடுகு, உளுந்து, கடலைபருப்பு, சீரகம் - தாளிக்க

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பருப்புடன் சேர்த்து முழு தக்காளி, பாதி பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை வேக வைத்துக் கொள்ளவும்.

பின்னர் சிறிதாக நறுக்கிய கத்தரிக்காய், கொத்தமல்லி சேர்த்து வேக விடவும்.

தனியாக ஒரு வாணலியில் தாளிக்கும் பொருட்களை தாளித்துக் கொள்ளவும். அதில் வெங்காயம், மீதி பூண்டு தட்டியது, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

பின்னர் வேக வைத்த பருப்பை சேர்த்து உப்பும் புளியும் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சாதத்துடனும், சப்பாத்தி, பூரிக்கும் மிகவும் பொருத்தமானது.