வாழைப்பூ வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நறுக்கிய வாழைப்பூ – 1 கப்

கடலைப்பருப்பு – 2 கப்

சோம்பு – 1 மேசைக்கரண்டி

மிளகாய் – 4

நறுக்கிய வெங்காயம் – 2 மேசைக்கரண்டி

எண்ணை - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து சோம்பு, மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

இதனுடன் வாழைப்பூவை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

அரைத்த கலவையுடன் வெங்காயம், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

எண்ணெயை காய வைத்து மாவை வடையாகத் தட்டி, பொரித்தெடுக்கவும்.

குறிப்புகள்: