V8 பான சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

V8 பானம் - 2 சிறிய கான் (2 Small cans)

வெட்டிய புரோக்லி (Broccoli) - 1/4 கப்

துருவிய கரட் - 1/4 கப்

உள்ளி (பூண்டு) - 5 பல்லு

புளி - சிறிய பாக்களவு

மிளகு தூள் - 1 1/2 தேக்கரண்டி

மல்லித்தூள் - 1 தேக்கரண்டி

சிறிய சீரகம் - 1 தேக்கரண்டி

சோள மாவு - 1 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - 1 நெட்டு

காராசேவு - 1/4 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கறிவேப்பிலையை பொடியாக அரிந்து வைக்கவும்

புளியை கரைத்து வைக்கவும்.

சோள மாவை கரைத்து வைக்கவும்.

புரோக்லியை 4 நிமிடங்கள் தண்ணீர் சேர்க்காது மைக்ரோவேவ் செய்து வைக்கவும்.

உள்ளி, சிறிய சீரகத்தை உரலில் அல்லது கிரைண்டரில் போட்டு இடித்து/அரைத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் V8 பானம், புளிக்கரைசல், உள்ளி- சீரக விழுது, அவித்த புரோக்லி, கரட், மிளகு தூள், மல்லித்தூள், முக்கால் கப் தண்ணீர், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கலந்து மூடி கொதிக்க விடவும்.

கலவை நன்கு கொதித்ததும் மூடியை திறந்து விடவும்.

பின்னர் சோள மாக்கரைசலை சேர்த்து 4 - 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

இதனை இறக்கி சூப் கிண்னங்களில் விட்டு காராசேவு தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: