ஹாட் ஸோர் வெஜிடபிள் சூப்
தேவையான பொருட்கள்:
காளான் - 1 கோப்பை
வெள்ளரி காய் - 1
உருளை கிழங்கு - 1
வெஜிடபிள் ஸ்டாக் அல்லது தண்ணீர் - 4 கோப்பை
லெமென் கிராஸ் - 2
வெங்காயம் - 1
தக்காளி - 1
சில்லி பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி
பூண்டு - 2 பற்கள்
புளி - நெல்லிக்காயளவு
எலுமிச்சை ரசம் - 2 மேசைக்கரண்டி
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு தூள் - 2 தேக்கரண்டி
செய்முறை:
லெமென் கிராஸின் மேலுள்ள காய்ந்த கீற்றுக்களை அகற்றி விட்டு ஒவ்வொன்றையும் நான்கு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
புளியை அரைக்கோப்பை தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கவும். பூண்டை நசுக்கி வைக்கவும்.
வெள்ளரிக்காயின் நடுவில் உள்ள பாகத்தை அகற்றி விட்டு நறுக்கவும். மற்ற காய்களையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வெஜிடபிள் ஸ்டாக்கை ஊற்றி அதில் லெமென் கிராஸ், சில்லி பேஸ்ட், புளித்தண்ணீர் ஆகியவறை போட்டு நன்கு கலக்கி அடுப்பில் வைக்கவும்.
ஸ்டாக் கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது மூடியைப் போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.
பிறகு ஒரு சட்டியில் எண்ணெயை காய வைத்து பூண்டு வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவும்.
பிறகு பொடியாக அரிந்த காய்களைப் போட்டு நன்கு வதக்கவும்.
இந்த வதக்கிய கலவையை அடுப்பில் உள்ள ஸ்டாக்கில் கொட்டி நன்கு கலக்கி கொதிக்க விடவும்.
காய்கள் நன்கு வேகும் வரை கொதிக்க விட்டு மிளகுத்தூளை போட்டு எலுமிச்சைரசத்தை ஊற்றி இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.