ஹாட் மட்டன் சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/4 கிலோ

வேக வைத்த சோளம் - 1/4 கப்

வெங்காயம் - 1

தக்காளி - 1

கேரட் - 1

பச்சை மிளகாய் - 1

இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி

பூண்டு - 2 பல்

டவுன்டா இலை - 2

பார்ஸ்லே கீரை அல்லது மல்லி தழை - சிறிது

கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி

சோம்பு தூள் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - தாளிக்க

உப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கேரட்டை நறுக்கி வைக்கவும்.

பிரசர் குக்கரில் மட்டனை கழுவி சுத்தம் செய்து போட்டு, அதில் இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து வேக விடவும்.

பின் ஒரு தவாவில் எண்ணெய் விட்டு வெங்காயம், டவுன்டா இலை போட்டு வதக்கி நறுக்கிய பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய், பார்ஸ்லே கீரை, சோம்பு தூள், கரம் மசாலா தூள் போட்டு தாளித்து மட்டன் சூப்பில் ஊற்றவும். அதில் கேரட், சோளம் சேர்த்து ஒரு விசில் விடவும். சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: