ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழித்துண்டுகள் - 1 கப்

ஸ்வீட் கார்ன் - 1 கப்

சிக்கன் ஸ்டாக் - 4 கப்

சோள மாவு - 2 தேக்கரண்டி

முட்டை - 1

சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி

வினிகர் - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோழி இறைச்சியை ஐந்து கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்.

சுமார் அரை மணிநேரம் வெந்த பிறகு அந்த நீரினை (ஸ்டாக்) வடித்து 4 கப் அளவிற்கு தனியே எடுத்துக் கொள்ளவும்.

வேக வைத்த கோழி இறைச்சியில் இருந்து எலும்புகளை நீக்கி, கறியை தனியே எடுத்துக் கொள்ளவும்.

இப்போது சிக்கன் ஸ்டாக்கினை வேக வைக்கவும். அதில் எலும்பு நீக்கிய சிக்கன் துண்டங்களையும், ஸ்வீட் கார்னையும் சேர்க்கவும்.

சிறிது வெந்தவுடன் சோள மாவினை சிறிது நீரில் கரைத்து சிறிது சிறிதாக ஊற்றிக் கலக்கி வேகவிடவும்.

முட்டையை உடைத்து ஒரு கப்பில் ஊற்றிக் கொண்டு, அதையும் சிறிது சிறிதாக கொதிக்கும் சூப்பில் சேர்த்து நன்கு கலக்கவும். முட்டை கெட்டியாகாமல், மெல்லிய இழைகளாக மிதக்க வேண்டும்.

கடைசியில் சோயா சாஸ், மிளகுத் தூள், வினிகர், உப்பு சேர்த்து இறக்கி சூடாக சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: