ஸ்பைசி வெஜிடபிள் சூப் வித் ரைஸ் நூடுல்ஸ்
தேவையான பொருட்கள்:
வேகவைத்த ரைஸ் நூடுல்ஸ் - 1 1/2 கப்
வேகவைத்த முட்டை - 2
சிக்கன் ஸ்டாக் க்யூப் - 1
தண்ணீர் - 1 1/2 லிட்டர்
பெரிய வெங்காயம் - 1
சதுரங்களாக வெட்டிய கேரட் - 1/4 கப்
1 cm நீளத்தில் வெட்டிய பீன்ஸ் - 1/4 கப்
நீளமாக அரிந்த முட்டைகோஸ் - 1/4 கப்
தக்காளி - 1
பேபி பாக் சோய் (baby pak soy) - 2 தண்டு
பூண்டு - 10 பல்
இஞ்சி - 2"துண்டு
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
சோயா சாஸ் (விருப்பப்பட்டால்) - 1 தேக்கரண்டி
பொடியாக அரிந்த மல்லிக்கீரை - 2 மேசைக்கரண்டி
பொரித்த வெங்காயம் செய்ய:
சின்ன வெங்காயம் - 10
சோள மாவு (corn flour) - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க
செய்முறை:
ரைஸ் நூடுல்ஸை கொதிக்கும் நீரில் 2நிமிடம் வேக வைத்து தண்ணீரை வடிகட்டவும். பின் குளிர்ந்த நீரில் அலசி வடிகட்டவும்.
சூப் செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக அரிந்த இஞ்சி, பூண்டு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி மிளகாய் தூள் சேர்த்து மேலும் அரை நிமிடம் வதக்கி 1 1/2லிட்டர் தண்ணீர் சேர்க்கவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் சிக்கன் ஸ்டாக் கியூப்,சர்க்கரை சேர்த்து மேலும் கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும் நான்காக வெட்டிய தக்காளி,கேரட் பீன்ஸ் சேர்த்து வேக விடவும்.கேரட் முக்கால் பாகம் வெந்ததும் முட்டை கோஸ் சேர்த்து இரண்டு நிமிடம் வேக விடவும். கீரையை சேர்க்கவும்.
ஒருதேக்கரண்டி சோய சாஸ் சேர்த்து 1நிமிடம் கழித்து இறக்கவும். பரிமாறும் கிண்ணத்தில் வேகவைத்த நூடுல்ஸை போட்டு மேலே சூப்பை காய் கறிகளோடு ஊற்றி வேக வைத்த முட்டையை இரண்டாக கீறி மேலே வைத்து மல்லித்தழை,பொரித்த வெங்காயம் தூவி பரிமாறவும்.
வெங்கயம் பொரிக்க:
சின்ன வெங்காயத்தை மெலிதாக நீளமாக வெட்டி சோள்மாவு கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும்.
5 நிமிடம் கழித்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். வெங்காயத்தை நேரடியாக சோள மாவில் புரட்டி எடுத்தும் பொரிக்கலாம்