வால் சூப்

on on off off off 2 - Ok!
2 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பீஃப் டெயில் - 1 (சிறியதாக கட் பண்ணி வாங்கவும்)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி

வெங்காயம் - 1 - (பெரியது, கட் பண்ணிக்ககொள்ளவும்)

தக்காளி -1 (கட் பண்ணவும்)

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகுத்தூள்- 1 தேக்கரண்டி

மல்லித்தூள் -2 தேக்கரண்டி

சீரகத்தூள்- 1 தேக்கரண்டி

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி.

கறிவேப்பிலை - கொஞ்சம்

அரைக்க:

தேங்காய் - 4 மேசைக்கரண்டி

அரிசி மாவு - 1 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் பீஃப் டெயிலை நன்றாக அலசி வடிகட்டவும்.

குக்கரில் பீஃப் டெயில், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகு, சீரகம், மஞ்சள், மல்லித்தூள்களை சேர்க்கவும். பின்பு நறுக்கிய வெங்காயம் தக்காளி, மல்லி இலை, உப்பு, தண்ணீர் 1 லிட்டர் சேர்க்கவும்.

குக்கரை மூடி முதல் விசில் வந்தவுடன் அரை மணி நேரம் சிம்மில் வைத்து இறக்கவும்.

ஆவி அடங்கியதும் தேங்காய், அரிசி மாவு கரைத்து ஊற்றி கொதி வந்ததும் இறக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் கொஞ்சம் வெங்காயம், கறிவேப்பிலை தாளித்துக்கொட்டவும்.

சுவையான வால் சூப் ரெடி.

குறிப்புகள்: