லென்டில் சூப்
தேவையான பொருட்கள்:
பச்சைநிற லென்டில் - 1 கோப்பை
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/2 கோப்பை
நறுக்கிய கேபேஜ் - 2 கோப்பை
நறுக்கிய செலரி - 1 கோப்பை
நறுக்கிய கேரட் - 1 கோப்பை
நறுக்கிய காளான் - 1 கோப்பை
நறுக்கிய உருளைக்கிழங்கு - 1 கோப்பை
நறுக்கிய குடைமிளகாய் - 1 கோப்பை
சிக்கன் ஸ்டாக் - 6 கோப்பை
நறுக்கிய தக்காளி - ஒரு கேன் 796 மிலி
உலர்ந்த தைம் இலை - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
ஆலீவ் ஆயில் - 2 மேசைக்கரண்டி
உப்பு தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை:
அடிகனமான ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், காளானைப் போட்டு வதக்கவும்.
பிறகு மற்ற பொருட்களையும் ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கி சிக்கன் ஸ்டாக்கை ஊற்றி கலக்கவும்.
தொடர்ந்து லென்டிலையும் சேர்த்து கலக்கிவிட்டு மூடிப்போட்டு கொதிக்கவிடவும். சூப் கொதிக்கும் பொழுது அடுப்பின் அனலை குறைத்து வைத்து வேகவிடவும்.
சுமார் ஒரு மணி நேரம் கழித்து லென்டில் நன்கு வெந்திருப்பதை உறுதி செய்துக் கொண்டு அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
டோஸ்ட் செய்த கார்லிக் பிரட்டுடன் சூடாக சூப் பவுலில் பரிமாறவும்.
குறிப்புகள்:
இந்த சுவையான சத்து நிறைந்த சூப், மத்திய உணவிற்கு எடுத்து செல்லக்கூடியதாக இருக்கும்.