ரோஸ் மரினோ காரட் சூப்
தேவையான பொருட்கள்:
காரட் - 75 கிராம்
பீன்ஸ் - 15 கிராம்
செலரி தண்டு - 10 கிராம்
பேபி கார்ன் - 15 கிராம்
வெங்காயம் - 1
ரோஸ் மரினோ - 3
சோளமாவு - 3 தேக்கரண்டி
குடைமிளகாய் - 1 தேக்கரண்டி
பூண்டு - 3 தேக்கரண்டி
பிரட் க்ரம்ப்ஸ் - 1 கப்
ஆலிவ் எண்ணெய் - 3 தேக்கரண்டி
தக்காளி - 1
ஜவ்வரிசி மாவு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காரட்டை வேகவைத்து நன்கு மசித்து வைத்து கொள்ளவும்.
சோளமாவுடன் சிறிது பால் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து வைத்து கொள்ளவும்.
எண்ணெய் சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், செலரி, பீன்ஸ், காரட், ரோஸ் மரினோ சேர்த்து வதக்கவும்.
பின்னர் பொடியாக நறுக்கிய பேபி கார்ன் சேர்த்து கிளறவும்.
உப்பு மற்றும் ஜவ்வரிசி மாவு சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
10 நிமிடத்திற்கு பின்னர் நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.
5 நிமிடத்துக்கு பிறகு மசித்த காரட்டை சேர்க்கவும்.
சோளமாவு கலவை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.