மெக்ஸிகன் சில்லி
தேவையான பொருட்கள்:
ரெட் பீன்ஸ் - 1/2 கப்
வெள்ளை கொண்டைகடலை - 1/4 கப்
கருப்பு பீன்ஸ் - 1/4 கப்
வெங்காயம் - 1
பூண்டு - 2 பல்
குடைமிளகாய் - 1
அலபீனோ பெப்பர் - 1
ப்ரௌன் சுகர் - 1 மேசைக்கரண்டி
பால்சாமிக் வினிகர் (balsamic vinegar) - 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
டொமேட்டோ ப்யூரி - 1 கப்
ஆலிவ் ஆயில் - 2 தேக்கரண்டி
பிரியாணி இலை - 1
செய்முறை:
மூன்று பீன்ஸ்களையும் 8 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் உப்பு, பிரியாணி இலை போட்டு வேக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் ஆயில் ஊற்றி நசுக்கிய பூண்டு வெங்காயம், அலபீனோ பெப்பர், குடைமிளகாய் போட்டு வாசம் போகும் வரை வதக்கவும். மிளகாய் தூள் சேர்க்கவும்.
வேக வைத்த பீன்ஸை சேர்த்து டொமேட்டோ ப்யூரி சேர்க்கவும்.
3 கப் தண்ணீர் ஊற்றி பால்சாமிக் வினிகர் சேர்க்கவும். அடுப்பை நிதானமாக எரியவிட்டு 45 நிமிடங்கள் வேக வைக்கவும்.
இடை இடையே கிளறி விடவும். தேவைப்பட்டால் தண்ணீர் இன்னும் கொஞ்சம் சேர்க்கவும்.
கடைசியாக ப்ரௌன் சுகர் சேர்த்து இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.