முருங்கை சூப் (1)
தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் - 2
வெங்காயம் - 1
தக்காளி - 3
துவரம்பருப்பு - 1/4 கப்
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 2 பல்
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகு - 1/4 தேக்கரண்டி
சோம்பு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
தனியா - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
மல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முருங்கைக்காயைத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி இரண்டையும் நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு இரண்டையும் நசுக்கிக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் மிளகு, சீரகம், சோம்பு, தனியா ஆகியவற்றை போட்டு வறுத்து பொடித்து வைக்கவும்.
இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து இவற்றுடன் மற்ற பொருட்களையும் சேர்த்து 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும்.
3 விசில் வந்ததும் இறக்கி வைத்து ஆறியதும் வடிகட்டி கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை தூவி இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.