முருங்கைக்கீரை சூப்
தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு பல் - 2
மிளகு தூள் - தேவையான அளவு
சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பூண்டை நசுக்கி வைக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கார்ன் ஃப்ளாரில் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி, பிறகு தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, மிளகு தூள், சீரகத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதித்ததும் முருங்கைக்கீரையைப் போட்டுக் கிளறவும்.
கீரை வெந்ததும், கரைத்து வைத்துள்ள கார்ன் ஃப்ளாரை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.