மிக்ஸ்டு சூப்
0
தேவையான பொருட்கள்:
பெங்களூர் தக்காளி - 2
பட்டன் காளான் - 5
சீரக பொடி - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தக்காளியையும், காளானையும் சுமாரான துண்டுகளாக நறுக்கி, ஒரு தம்ளர் தண்ணீரில் வேக வைக்கவும்.
வெந்ததும் மிக்ஸியில் இட்டு அரைத்து, பெரும் துளையுள்ள வடிகட்டியில் வடிகட்டவும்.
1 கப் தண்ணீர், சீரக பொடி, மிளகு தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.