மஸ்ரூம் கார்ன் காப்சிகம் சூப் செய்முறை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மஸ்ரூம் - 100 கிராம்

உதிர்த்த கார்ன் (ஃப்ரோசன் கார்ன் அல்லது வேகவைத்தது) - ஒரு கைப்பிடி

கேப்சிகம் - 1

சூப் ஸ்டாக் - 1 க்யூப்

மைதா - 1 மேசைக்கரண்டி

கார்ன் மாவு - 1 மேசைக்கரண்டி

பெப்பர் - 1/2 தேக்கரண்டி

சோயா சாஸ் - 1 அல்லது 2 தேக்கரண்டி

வெங்காயம் - சிறியது 1

எண்ணெய் அல்லது பட்டர் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவைக்கு

செய்முறை:

மஸ்ரூம், கேப்சிகம், வெங்காயம் கட் பண்ணி வைக்கவும்.

ஒரு லிட்டர் தண்ணீர் கொதிக்க வைத்து, அதில் சூப் கியூப், மஸ்ரூம், கேப்சிகம், கார்ன் போட்டு வேக வைக்கவும்.

வெந்த பின்பு, மைதா, கார்ன் மாவு, தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.

கெட்டியாகி வரும் சமயம், சோயா சாஸ், பெப்பர், தேவைக்கு உப்பு சேர்க்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் அல்லது பட்டர் விட்டு கட் பண்ணிய வெங்காயம் வதக்கி சூப்பில் கொட்டி இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: