ப்ரோக்கோலி சூப்
தேவையான பொருட்கள்:
புரோக்கோலி (Brocoli ) -1 சிறிய பூ
வெங்காயம் - 1
பட்டர் - 2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
சோர் கீரிம் (Sour Cream) அல்லது தயிர் (விரும்பினால்) - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் புரோக்கோலியை சிறிய சிறிய பூக்களாக வெட்டி கொள்ளவும். வெங்காயத்தினை பொடியாக நறுக்கவும்.
ஒரு கடாயில் பட்டரினை போட்டு வெங்காயத்தினை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது வதங்கியவுடன் புரோக்கோலி பூக்களை சேர்த்து வதக்கவும்.
இத்துடன் 2 – 3 கப் தண்ணீர் அல்லது பால் மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்.
நன்றாக வெந்தபிறகு சிறிது நேரம் ஆறவைத்து மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.
அரைத்த விழுதினை கடாயில் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிடவும். (தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்)
பரிமாறும் பொழுது இந்த சூப் மீது மிளகு தூள் மற்றும் சோர் க்ரீம் சேர்த்து சூப் பவுலில் பரிமாறவும்.