பானூ சூப்
0
தேவையான பொருட்கள்:
வெல்லம் - 4
மிளகாய்த் தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
புளி - சிறு எலுமிச்சை அளவு
தண்ணீர் - 10 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும்.
அதனுடன் மிளகாய்த்தூள், வெல்லம், புளிச்சாறு, சிறிதளவு மஞ்சள்தூள் முதலியவற்றைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன், கடுகைத் தாளித்து, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, கொதித்துக்கொண்டிருக்கும் கலவையில் கொட்டி அடுப்பில் இருந்து இறக்கவும்.