பருப்பு சூப்
0
தேவையான பொருட்கள்:
பருப்பு - 4 கப்
விரும்பிய காய்கறி - 1 கப்
ரொட்டி துண்டுகள் - சிறிதளவு
துருவிய பாலாடைக்கட்டி - 4 மேசைக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் ரொட்டித்துண்டுகளை பொடிச் செய்து போட்டு வறுத்துக் கொள்ளவும்.
முதலில் ஒரு பாத்திரத்தில் பருப்பை போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
வெந்ததும் கெட்டியாக இருந்தால் தண்ணீர் ஊற்றி கடைந்துக் கொள்ளவும்.
அதில் விரும்பிய காய்கறிகளை போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
நன்றாக வெந்தபின் வடிகட்டி துருவிய பாலாடைக் கட்டியைப் போடவும்.
பிறகு வறுத்த ரொட்டித்துண்டுகளையும் தூவிக் கொள்ளவும்.
பரிமாறும் போது தேவையான அளவு உப்பு, மிளகு சேர்த்து சூப் பவுலில் பரிமாறவும்.