நூடுல்ஸ் சூப் (1)
தேவையான பொருட்கள்:
சிக்கன் (எலும்பு நீக்கியது) - 200 கிராம்
ரைஸ் நூடுல்ஸ் - 1 பாக்கெட்
இறால் - 5
துண்டுகளாக்கி எண்ணெயிலில் பொரித்து டோஃபு - 1
சின்ன வெங்காயம் - 5
பூண்டு - 4 பல்
இஞ்சி - 1 செ.மீ துண்டு
நீளவாக்கில் நறுக்கிய கேரட் - 1/4 கப்
நீளவாக்கில் நறுக்கிய கோஸ் - 1/4 கப்
பட்டாணி - 1/4 கப்
வெங்காயத்தாள் - 4
கடுகு கீரை அல்லது ஏதேனும் பெரிய இலை உள்ள கீரை - 1/2 கப்
நான்காக நறுக்கிய தக்காளி - 1
சிக்கன் ஸ்டாக் - 1 லிட்டர் அல்லது சிக்கன் ஸ்டாக் க்யூப் 1 லிட்டர் நீரில் கரைக்கவும்
சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் அல்லது வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிக்கன் ஸ்டாக் தயாரிக்கும் முறை எனது சிக்கன் போரிட்ஜ் குறிப்பில் உள்ளது. அதன் படி ஸ்டாக் தயாரித்து கொள்ளவும்.
ஸ்டாக் க்யூப் பயன்படுத்தினால் கோழியை மெல்லிய துண்டுகளாக்கி கொள்ளவும்.
சூப் செய்யும் பானில் எண்ணெய் அல்லது வெண்ணெய் போட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி 1 நிமிடம் போட்டு வதக்கவும்.
மெல்லியதாக வெட்டிய கோழியை போட்டு வதக்கவும் (சொந்தமாக ஸ்டாக் தயாரித்தால் வேக வைத்த கோழியை மெல்லியதாக வெட்டி தனியே வைத்து கொள்ளவும்)
கோழி ஓரளவு வெந்தததும் காய்களையும், இறாலையும், டோஃபுவையும் போட்டு 1 நிமிடம் வதக்கி ஸ்டாக் சேர்க்கவும். மேலும் 1/2 லிட்டர் தண்ணீர் சேர்க்கவும்.
நன்றாக கொதித்த உடன் நூடுல்ஸை போடவும்.(வேக வைத்த கோழியை இப்போது சேர்க்கவும்)
தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும். 2 நிமிடம் வெந்ததும் இறக்கவும்.
பரிமாறும் கிண்ணங்களில் ஊற்றி வெங்காயத்தாள் தூவவும்.
மிளகு தூள் அவரவர் ருசிக்கேற்ப அருந்தும் போது சேர்த்து கொள்ளலாம்.