தாய்லாந்து சைவ தேங்காய்ப்பால் சூப்
தேவையான பொருட்கள்:
மஷ்ரூம் - 10
காலங்கால் (தாய்லாந்து இஞ்சி : Galangal) - ஒரு பெரிய துண்டு அல்லது ஒரு பெரிய துண்டு இஞ்சி
லெமன் கிராஸ் - 2
எலுமிச்சை இலைகள் - 6
சீலரி - 1
இரண்டாக கீறிய பச்சை மிளகாய் - 3
பொடித்த காய்ந்த மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
திக்கான தேங்காய்ப்பால் - 2 கப்
எலுமிச்சையின் சாறு - 1/2 பழத்தின் சாறு
சீனி - 2 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1/2 தேக்கரண்டி
வெங்காய தழைகள் - 5
கொத்தமல்லி - ஒரு பிடி
தண்ணீர் - 1 கப்
உப்பு - 1 தேக்கரண்டி
செய்முறை:
மஷ்ரூமை சுத்தம் செய்து சிறுத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
லெமன் கிராஸ்(வெள்ளை நிற உட்பகுதி), செலரி, வெங்காய தாள்களை சிறியதாக அரிந்துக் கொள்ளவும்.
இஞ்சியை பெரிய துண்டுகளாக(வட்ட வடிவில்) நறுக்கவும்.
ஒரு பத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மஷ்ரூம், லெமன் கிராஸ், இலைகள், உப்பு, சீனி,காலங்கால்(இஞ்சி), சீலரி, பொடித்த மிளகாய்த்தூள், பச்சை மிளகாய் போட்டு 7 நிமிடம் கொதிக்க விடவும்.
தேங்காய்ப்பால் சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் எரிய விடவும். தேங்காய்ப்பாலை அதிக தீயில் கொதிக்க விட்டால் திரிந்து விடும்.
2 நிமிடம் கழித்து சோயாசாஸ் ஊற்றவும்.
கொத்தமல்லி, வெங்காயத்தாள்களை தூவி இறக்கவும்.
எலுமிச்சை சாறை சேர்க்கவும். எப்போதும் எலுமிச்சை சாறை இறக்கிய பின்தான் ஊற்ற வேண்டும். இல்லாவிடில் டேஸ்ட் மாறிவிடும்.