தக்காளி சூப் (5)
தேவையான பொருட்கள்:
தக்காளி - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
காரட் - 1
சிறிய உருளைக்கிழங்கு - 1
பாலாடைக்கட்டி - 25 கிராம்
வெண்ணெய் - 30 கிராம்
சோளமாவு - 30 கிராம்
பால் - 100 மி.லி
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தக்காளி, காரட், உருளைக்கிழங்கு ஆகியவற்றை கழுவி சற்று பெரிய துண்டங்களாய் நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தினையும் நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் வெண்ணெயை விட்டு அதில் வெங்காயத்தை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
வதக்கிய வெங்காயம், நறுக்கிய காய்கறிகள் இவற்றுடன் பால், துருவிய பாலாடைக்கட்டி மற்றும் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து ஒரு குக்கரில் இட்டு 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
பிறகு இறக்கி ஆறவைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
இதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் மற்றும் சிறிதாய் நறுக்கிய பிரட் துண்டங்கள் சேர்த்து சற்று சுட வைத்து சூப் பவுலில் அருந்தவும்.